Wednesday, February 14, 2007

உளறல் - 0010


படையுடன்

மோதினால்

விழுப்புண் !


ஜடையுடன்

மோதினால்

விழிப்புண் !


விழுப்புண்

வலிக்கும் -


விழிப்புண்

நினைக்க

நினைக்க்

இனிக்கும் !

உளறல் - 0009



பேசினால்

கொல்வேன்

என்கிறார்

உன் தந்தை !


பேசாமல்

கொல்கிறது

உன் விழி !


பேசவில்லை

எனில்

மரிப்பேன்

என்கிறது

இதயம் !


"மரணம்"
ஏவ்வகையில்

எனினும் - என்

"ஜனனம்"

உன் காதலில்தான் !



Tuesday, February 13, 2007

உளறல் - 0008


காதல்

முள் படுக்கையா?

மலர் படுக்கையா?

விவாதத்தை

விட்டொழியுங்கள் !


கிழிபட்டு

கசிவது

குருதியல்ல

உயிரணுக்கள் !


உலராமல்

கோடிகளாய்

உயிர்த்தெழும் !


வறண்டக்

காயங்களை

சுரண்டும்போது

வருவது

வலியல்ல

வசந்த

நினைவுகளே !

Friday, February 02, 2007

உளறல் - 0007


நிலா முகம்

நட்ச்சத்திர கண்கள்


செவ்வாய் உதடு

கூந்தல் முகில்


...............................

எதற்கு

சுற்றி வளைத்து


ஒரே

வார்த்தையில்


நீயென்

பிரபஞ்சம் !

உளறல் - 0006


நாடியை
பிடித்து

பாதிதான்
துடிப்பதாக

பதறினார்
டாக்டர் !

மீதி
உன்னிடம்

சுருதியாய்
இசைப்பதை

நான்
விளக்கியபின்

பொறாமையில்
துடித்தார்

அந்த
பிரம்மச்சாரி !

உளறல் - 0005


இணைவோம்

என

நினைத்திருந்தோமே

பிரிந்துவிட்டோம்

என

வருந்த வேண்டாம் !


நம்

உடல்கள்

அழிந்தபின்

ஆயிரம் கோடி

ஆன்மாக்களிலும்


நம்மை

அடையாளம்

காண்போம் !

Thursday, February 01, 2007

உளறல் - 0004




உன்னை
எதனுடனும்
ஒப்பிட
ஒப்பவில்லை !

உயர்திணையும்
அஃறிணையும்
சம மாகாதென்பதால்
அல்ல

உன்னால் யாருக்கும்
தாழ்வு மனபான்மை
வரகூடாது
என்பதால் !

உளறல் - 0003


பத்து நிமிடம்
காத்திருந்ததிற்கே
இப்படி
அலுத்துக்கொள்கிறாயே

நீ வருவாயென அறிந்து
பத்து வருடமுன்பே
பிறந்து

உனக்காக
காத்திருக்கும்
என் காத்திருப்பை
என்னவென்பது !

உளறல் - 0002




தாஜ்மகாலை
காதல் சின்னமென
எவன் சொன்னான் ?

கான்கிரிட்
கலவையில்
காணாமல் போக
காதலென்ன
கட்டுமான பொருளா ?

உளறல் - 0001


நீயும் நானும்
பிரிவதென்று
முடிவெடுத்தபின்

உன் நண்பர்களிடம் நானும்
என் நண்பர்களிடம் நீயும்
கை குலுக்கிக் கொண்டொம் !

ஆனால் - நாமிருவரும்
கைகுலுக்கவில்லை !